2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

Live Updates | பிஞ்சு உயிர் பறிபோனது

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

08.20 am குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


07.48 am சுர்ஜித்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி

 

07.30 am

இறுதி அஞ்சலிக்காக கல்லறைக்கு கொண்டு வரப்பட்டது சுஜித்தின் உடல்.


07.00 am
சுஜித் உடல் நேரடியாக கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 


6.45

சுஜித்தின் உடலுக்கு தமிழக அமைச்சர் அஞ்சலி 59. 
 


6.30 am
பிரேத பரிசோதனை நிறைவு - நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்படும் சுஜித் உடல்.


5.45 am
மணப்பாறை அரசு மருத்துவமனையில் சுஜித் உடல் - பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.


4.59 am
அழுகிய நிலையில் சுஜித் உடல் மீட்பு - மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


9:41 pm 

குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக விரைவில் மீட்பதற்குண்டான அனைத்து பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன -  துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.


9:00 pm

ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிக்காக பஞ்சாப்பில் இருந்து இரண்டு விவசாயிகள் திருச்சிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.


8:22 pm 
”குழந்தை சுஜித்தை மீட்க தன்னார்வலர்களின் ஆலோசனைகளையும் முயற்சிகளையும் பயன்படுத்திக் கொள்கிறோம். யாரையும் தவிர்க்கவில்லை.” - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.

 



7:50 pm 
 

98 அடி ஆழம் குழி தோண்டி முடிக்க இன்னும் 12 மணி நேரம் ஆகலாம் - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.

 
 


7:40 pm 
 

ஆள்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணியினை நாளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார்.

 



6:47 pm
ரிக் இயந்திரம் மூலம் 55 அடிவரை குழி தோண்டிய பின்னர், மீண்டும் போர் வெல் இயந்திரம் மூலம் பாறைகள் துளைக்கப்படும். பின்னர், மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடக்கும்.

 



6:44 pm
குழந்தை மீட்பு பணிகள் விரைந்து நடக்க வேண்டும்; அனைவரையும் போல சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; மேலும், இது பற்றி பேசி அரசியலாக்க விரும்பவில்லை - மு.க ஸ்டாலின்

 


6:29 pm
 

72 மணி நேரத்தை கடந்து நடக்கும் மீட்பு பணி - 50 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது; 60 அடிக்கு மேல் மண் இருப்பதால் குழி தோண்டும் பணி விரைவாகும் -அதிகாரிகள்.


5:55 pm 

உசுரோட வா மகனே - கவிதை வெளியிட்டு வைரமுத்து உருக்கம்

சோளக் கொல்லையில சொல்லாமப் போனவனே

மீளவழி இல்லாம நீளவழி போனவனே

கருக்குழியிலிருந்து கண்தொறந்து வந்ததுபோல்

எருக்குழியிலிருந்து எந்திரிச்சு வந்திரப்பா

ஊர் ஒலகம் காத்திருக்கு உறவாட வா மகனே

ஒரே ஒரு மன்றாட்டு உசுரோட வா மகனே

என்று வைரமுத்து தனது ட்விட்டரில் கவிதை எழுதியுள்ளார். 


5:45 pm 

மழைக்கு மத்தியிலும் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.


 5:43 pm 

மீட்புப்பணி நடக்கும் இடத்தில் மழை பெய்து வருகிறது.


 5:37 pm 

சுர்ஜித் மீட்பு பணிகள் பற்றி பிரதமர் மோடியிடம் விளக்கியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

4:51 pm

குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் 71 மணி நேரத்தை தாண்டியுள்ளது.


4:13 pm 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் கை மீண்டும் கெமராவில் தெரிகிறது. எனவே, கையைக் கவ்வி  தரையிலிருந்து மேலே தூக்க முயற்சிக்கலாமா? என்றும் ஆலோசனை நடத்தப்படுகிறது.


 4:02 pm 

போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளை துளையிடும் பணி முடிவடைந்தது. மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்படவுள்ளது


3:46 pm 

சிறுவன் மீட்கப்படுவது பற்றி தமிழக முதல்வரிடம் இந்திய பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

குழந்தையின் மீட்பு பணி குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். 

இதுகுறித்த தகவலை பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “குழந்தை சுர்ஜித்திற்காக தன்னுடைய பிரார்த்தனை இருக்கும். குழந்தையை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுக்க அனைத்து வகையான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.


3:09 pm 

போர்வேல்ஸ் இயந்திரத்தை பயன்படுத்தி 40 அடிக்கு கீழ் பாறையில் 10 அடி துளையிடப்பட்டுள்ளது.

இதேபோல் பாறையில் 4 ஓட்டைகளை போட்டு பாறையை சிதைத்து எடுப்பார்கள். பின்னர் ரிக் வாகனத்தை வைத்து 10 அடியில் துளையிட்ட பாறைகளை வெளியே எடுக்கும் பணி நடைபெறும்.  இப்படியே 98 அடி சென்று பாறைகளை அகற்றுவார்கள்.

முதல் ரிக் இயந்திரம் 33 அடியும், 2வது ரிக் இயந்திரம் 7அடியும் பள்ளம் தோண்டியுள்ளது.


2:56 pm 

போர்வெல் மூலம் பாறைகளில் துளையிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 65 அடி ஆழம் வரை 3 இடங்களில் துளையிடப்பட்டுள்ளது.


1:39 pm 

போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகள் துளையிடப்படும் நிலையில், பாறைத்துகள் தூசிகள் அப்பகுதி முழுவதும் எழுந்துள்ளன.


1:34 pm 

போர் வெல் மூலம் குழி தோண்டும் பணி தொடக்கம்


12:57 pm 

1200 குதிரைத் திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகள் உடைக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்தில் 100 அடிவரை இந்த இயந்திரத்தால் தோண்ட முடியும். பாறைகள் மட்டும் உடைக்கப்பட்டு பின்னர் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்படும்.


 
12:54 pm 

போர் வெல் மூலம் பாறைகளை உடைத்து பின்னர் மீண்டும் ரிக் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட உள்ளது.


 
12:38 pm 

உள்ளே இறங்கும் வீரர் பாறைகளின் தண்மை குறித்து ஆய்வு செய்வார்.

 



12:34 pm

தோண்டப்பட்டுள்ள குழிக்குள் இறங்கி ஆய்வு செய்ய ஏணி மூலம் தீயணைப்புப் படை வீரர் உள்ளே செல்கிறார்.


குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணறு அருகே 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. 

கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீட்புப் பணி 4ஆவது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.

ரிக் இயந்திரம் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தற்போது 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதல் ரிக் இயந்திரம் 35 அடியும், இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் பள்ளம் தோண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதனிடையே 2ஆவது ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளது.  இயந்திரத்தில் உள்ள போல்டுகள் சேதமடைந்து இருப்பதால் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்தி துளையிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X