2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா.. சிறு நகரங்களையும் குறிவைத்து ஏவுகணை வீச்சு

J.A. George   / 2022 மார்ச் 15 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், 3 வாரங்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ்-வின் வடக்கு பகுதியில் உள்ள ஒபோலோன்ஸ்கியில் 9 மாடி கட்டடத்தின் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியதில் கட்டடம் தீ பிடித்து உருக்குலைந்தது.

கட்டடத்தில் இருந்த இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை ராணுவ வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் மற்றும் போர் வியூகங்களை 3 வகையாக மாற்றி அமல்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதன்படி உக்ரைனின் ராணுவ நிலைகள் மீது குண்டுவீசி தாக்கவும் சிறிய நகரங்களை தகர்க்கவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.

மேலும் கீவ் மற்றும் புறநகர் பகுதிகளில் குண்டுவீசி அதிரடி தாக்குதல் நடத்தவும் ரஷ்ய ராணும் திட்டமிட்டுள்ளது. தற்போது கீவ் நகரின் புறநகர் பகுதியான தெற்கு திசையில் மட்டுமே சாலை போக்குவரத்து நடைபெறுகிறது. 

மற்ற 3 திசைகளையும் ரஷ்ய ஏவுகணை படைகள் ஆக்கிரமித்துள்ளன. இதன் காரணமாக எந்த நேரத்திலும் கீவ் நகரம் ரஷ்யாவின் வசம் செல்லலாம் என்று கூறப்படுகிறது.

மரியுபோலில் மகப்பேறு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த, பெண்ணும் அவரது குழந்தையும் உயிரிழந்தனர். கடந்த 10 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது, காயமடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் புகைப்படம் வெளியாகி வைரலானது. 

ரஷ்ய ராணுவத்தினரும் கடும் கண்டனத்திற்கு ஆளாகினர். அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரியுபோலில் மட்டும் இதுவரை 2 ஆயிரத்து 200 அப்பாவி மக்களை ரஷ்ய ராணுவம் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. 

நான்கு நாள்களில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் போரினால் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கீவ் பகுதியில் ரஷ்ய தாக்குதலால் காயமடைந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, உக்ரைன் ராணுவ வீரர்களை அந்நாட்டு ஜனாதிபதி செலன்ஸ்கி நேரில் சென்று நலம் விசாரித்தார். 

போரில் காயமடைந்த வீரர்களுக்கு, DEFENDERS OF UKRAINE விருதை வழங்கி கவுரவித்தார். அதிபரின் வருகையால் மகிழ்ச்சியடைந்த வீரர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X