2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

பட்ஜெட் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடங்கியது

J.A. George   / 2023 நவம்பர் 14 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள்  இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (14) ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 22 முதல் டிசெம்பர் 13 வரை 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பான வாக்களிப்பு டிசெம்பர் 13ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது, ​​தினமும் காலை 09.30 மணி முதல் 10 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் 05 கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, பின்னர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விவாதம் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X