2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

புதின் பெரிய விலை தரவேண்டியிருக்கும்: பைடன் எச்சரிக்கை

J.A. George   / 2022 மார்ச் 02 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றார்.

இதற்காக புதின் "நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்" என்றும் பைடன் கூறினார்.

'ஸ்டேட் ஆஃப் யூனியன்' (அமெரிக்க ஒன்றியத்தின் நிலை) உரையை அமெரிக்க பாராளுமன்றத்தில் தொடங்கிய பைடன் இந்த எச்சரிக்கையை விடுத்தார். 

சர்வாதிகாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புக்கு உரிய விலையை தராவிட்டால், அவர்கள் மேலும் குழப்பத்தை விளைவிப்பார்கள் என்று கூறிய பைடன், முன்கூட்டியே திட்டமிட்ட, தூண்டுதல் ஏதுமில்லாத போரை தொடங்கியபோது "சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகள்" அமெரிக்காவுடன் நிற்பதாக குறிப்பிட்டார்.

"புதின் தவறாக கணக்குப் போட்டுவிட்டார். நாங்கள் தயாராகவே இருந்தோம்," என்றும் தெரிவித்தார் பைடன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X