2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

தவறான தகவல்கள் பற்றி SLT-MOBITEL தெளிவுபடுத்தல்

J.A. George   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் க்ளவுட் (LGC) சேர்வர் கட்டமைப்பை நிர்வகிப்பது மற்றும் தேசிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு (NMRA) சேவைகளை வழங்குவது தொடர்பில் அண்மையில் வெளியாகியிருந்த தவறான ஊடக அறிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தலை வழங்க SLT-MOBITEL கவனம் செலுத்தியுள்ளது.

வெளியிடப்பட்ட சில ஊடக அறிக்கைகளில் மருந்துப் பொருட்கள் உருவாக்கம் மற்றும் இதர தொடர்புபட்ட உசாத்துணை ஆவணங்கள் அடங்கலான இரகசியத்தன்மை வாய்ந்த தகவல்கள் அடங்கிய NMRA தரவுகள், அதன் கட்டமைப்பிலிருந்து கடந்த மாதம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான தரவு-பெக்அப் (data-backup) இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த அறிக்கைகளில் 2018 ஆம் ஆண்டில் அதிகார சபையினால் மருந்துப் பொருட்களை பதிவு செய்வது மற்றும் புதுப்பித்தலுக்காக ஒன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் செயற்படுத்தப்படும் இலங்கை அரசாங்க க்ளவுட் (LGC) கட்டமைப்பில், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இந்தத் தரவுகள் சேமிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

குறித்த இலங்கை அரசாங்க க்ளவுட் (LGC) ஹோஸ்ட் சேவைகளை SLT-MOBITEL வழங்கவில்லை என்பதை உறுதியாக தெரிவிப்பதுடன், அதற்காக ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முக்கியமாக, NMRA க்கு அவ்வாறான சேவையை வழங்கவில்லை என்பதுடன், எவ்விதமான NMRA தரவுகளும் SLT டேட்டா சென்ரரில் சேமிக்கப்படவில்லை என்பதையும் SLT-MOBITEL உறுதியாக தெரிவிக்கின்றது.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், நிறுவனத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எந்த விதத்திலும் இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதை அனைத்து இலங்கையர்களுக்கும் SLT-MOBITEL உறுதியாக தெரிவித்துக் கொள்வதுடன், தனது சகல செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை தொடர்ந்தும் பேணி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .