Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியாவிலுள்ள காடுகளில் ஏற்படும் காட்டுத் தீ காரணமாக அங்கு வாழும் ஒரங்குட்டான்கள் (மனித குரங்குகள்) அழிவை எதிர்கொண்டுள்ளன. இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் போர்னியா தீவிலுள்ள மீட்பு மையத்தில் வைத்து இவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் நோய்வாய்ப்பட்டுள்ள 16 ஓரங்குட்டான்கள், கலிமான்டனிலுள்ள போர்னியோ ஒரங்குட்டான் அறக்கட்டளை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை, புகை மற்றும் வெப்பம் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
மேற்படி அறக்கட்டளை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஒரங்குட்டான்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் கேலியும் கிண்டலுமிக்க விளையாட்டுக்களை கண்டு அதன் பராமரிப்பாளர்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .