George / 2016 ஜூன் 07 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

வேதாளம் திரைப்படத்தை அடுத்து நடிகர் அஜீத் நடிக்கவுள்ள அவரது 57ஆவது திரைப்படத்தையும் இயக்குநர் சிவா இயக்குகின்றார்.
தற்போது அஜீத், குடும்பத்துடன் வெளிநாட்டில் உள்ளதால் ஜூலை 15ஆம் திகதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.
இதற்கிடையே இந்தத் திரைப்படத்துக்கும் இசையமைக்கும் அனிருத், வெளிநாட்டில் இருக்கும் அஜீத்தை இங்கிருந்தபடியே டியூன்களை கேட்க வைத்து ஓகே செய்து கொண்டிருக்கிறாராம்.
மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக யார் என்பதில் ரகசியம் காக்கின்றார் சிவா.
சிவாவின் விருப்ப நடிகையான தமன்னா நடிப்பார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் பின்னர் அந்த செய்தி ஓய்ந்துவிட்டது.
தற்போது இரண்டு நாயகிகள் நடிக்கும் அந்த திரைப்படத்தில் ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்த மாகியிருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால், இன்னொரு நாயகி யார் என்பது ரகசியமாகவே உள்ளது. அதனால் அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்து விட்டு விஜயசேதுபதியுடன் ஆண்டவன் கட்டளையில் நடித்துள்ள ரித்திகா சிங்கின் பெயரும் அடிபடுவதாக புதிய தகவல் கசிந்துள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago