2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அஜீத்துக்கு வில்லனாகும் சசிகுமார்..!

George   / 2016 ஜூன் 23 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அவரது 57ஆவது திரைப்படத்தில் வில்லனாக நடிகர் சசிக்குமார்  நடிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பாலாவின் தாரைத்தப்பட்டை திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே. சுரேஷ், அஜீத் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நாயகன் சசிகுமார் முக்கிய வில்லனாக நடிப்பதாக இன்னொரு பரபரப்பு செய்தி பரவியுள்ளது. 

சுப்ரமணியபுரம் திரைப்படத்தை இயக்கி நடித்த சசிகுமார், இப்போது வரை நாயகனாகத்தான் நடித்து வருகிறார். அதனால் தற்போது இந்த செய்தி பரவியிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 

அரவிந்த்சாமி, அருண்குமார்  வரிசையில் சசிகுமாரும் ஒரு மாற்றத்துக்காக வில்லனாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X