2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அஜீத் ஸ்டைலில் விஜய்

George   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெறி  திரைப்படத்தில் விஜய் இரு கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்களில் விஜய் ஒரே கெட்டப்புகளில் இருக்கிற மாதிரியான புகைப்படங்களே வெளிவந்தன. 

ஆகவே, இன்னொரு கெட்டப் என்னவாக இருக்கும் என இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். திரைப்படக்குழுவினரும் விஜய்யின் புதிய கெட்டப்பை வெளியிட வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். 

ஆனால், தற்போது விஜய்யின் புதிய கெட்டப் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மொட்டைத் தலையில் சற்று முடி வளர்ந்துள்ளது போன்ற ஒரு கெட்டப்பில் வருகிறார். இந்த கெட்டப்புடன் அவர் இரசிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒனறு தற்போது சமூக இணையதளங்களில் பரவி வருகிறது. 

ரெட், வேதாளம் ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார். அஜீத்தின் இந்த கெட்டப்பை இரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். தற்போது விஜய்யும் அதுபோல் தெறியில் நடித்திருப்பதால், அவருக்கும் இரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்பப்படுகிறது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X