2025 மே 15, வியாழக்கிழமை

அதர்வாவின் திருப்பம்

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரும்புக் குதிரை, சண்டி வீரன் போன்ற திரைப்படங்கள், நடிகர் அதர்வாவுக்கு பெரிதாக கைகொடுக்காத போதிலும், ஈட்டி, கணிதன் போன்ற அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இதனையடுத்து, 'ருக்குமணி வண்டி வருது' என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ஆனால், அந்தத் திரைப்படம் திரையிடப்படவுள்ளமை தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து, தனது சொந்த தயாரிப்பில் வெளிவந்த 'பாணா காத்தாடி'இல் தன்னை அறிமுகம் செய்த பத்ரி இயக்கும் 'செம போதை ஆகாத' திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதர்வா.

இதற்கு முன்பு பெரிய அளவில் சமூக நோக்கம் உள்ள கதையில் நடிக்காத போதும், குடியால் ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லும் கதையில் நடிக்கிறார் அதர்வா. அதனால் இவர், அந்தத் திரைப்படத்தில் மிகவும் ஆர்வமாக நடித்து வருவதாகவும் இதுபோன்ற சமூக நோக்கமுள்ள கதைகளில் இனிமேல் அவ்வப்போது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தன்னிடம் பக்கா கொமர்சியல் கதையைச் சொல்லும் இயக்குநர்களிடம், ஆங்காங்கே சின்னச்சின்ன சமூக நோக்கமுள்ள காட்சிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அதர்வா கூறுகின்றாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .