S.Renuka / 2026 ஜனவரி 26 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசெம்பர் 5ஆம் திகதி ரிலீஸான துரந்தர் பொலிவூட் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. படம் ரிலீஸான 46 நாட்களில் உலக அளவில் ரூ.1329.40 கோடி வசூல் செய்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக பிரபலமான சாரா அர்ஜுன், 'துரந்தர்' படம் மூலம் ஹீரோயினாகியிருக்கிறார். அங்கு தான் சர்ச்சையே ஆரம்பித்தது. ஹீரோ ரன்வீர் சிங்கிற்கு 40 வயது. ஆனால், சாராவுக்கோ 20 வயது. தன் வயதில் பாதி குறைவாக இருக்கும் சாராவுக்கு ஜோடியாக நடிக்கலாமா? ரன்வீர் சிங் என துரந்தர் ரிலீஸுக்கு முன்பில் இருந்து தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

சினிமாவில் இது போன்று வயது வித்தியாசத்துடன் ஹீரோ, ஹீரோயினை தெரிவு செய்வது ஒன்றும் புதிது அல்ல. இந்நிலையில், தான் துரந்தர் வசூல் சாதனையோடு சேர்த்து ரன்வீர், சாராவின் வயது வித்தியாசம் பெரிய விஷயமாக தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற செவ்வியில், வயது வித்தியாசம் பற்றி பேசியிருக்கிறார் சாரா அர்ஜுன்.
அவர் கூறியதாவது,கதைக்கு தேவைப்பட்டதால் அப்படியொரு வயது வித்தியாசத்தில் ஹீரோ, ஹீரோயினை தெரிவு செய்திருக்கிறார் இயக்குநர். துரந்தர் ரிலீஸுக்கு முன்பு நான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை. அதனால் வயது வித்தியாசம் குறித்த எந்த பேச்சும் எனக்கு தெரியாது. அனைவருக்கும் கருத்து இருக்கும். வாழு வாழ விடு என்று நம்பும் ஆள் நான். அது அவர்களின் கருத்து. அதனால் நான் யோசிக்கும் விதம் மாறப்போவது இல்லை. எனக்கு துரந்தர் படக் கதை தெரியும். வயது வித்தியாசம் அதில் பெரிதாக தெரியாது என்பது தெரியும். அவ்வளவு தான்.

எதிர்காலத்தில் நான் யாருடன் சேர்ந்து நடித்தாலும் யாராலும் ரன்வீர் சிங்கை முந்த முடியாது. நடிப்பில் கவனம் செலுத்துவதோடு மட்டும் அல்லாமல் செட்டில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்வார். படம் என்பது கூட்டு முயற்சி என்று நினைக்கிறார். நாம் என்ன செய்கிறோம், செட்டில் என்ன டிசைன் செய்கிறார்கள் என அனைத்தையும் கவனிப்பார் என்றார்.
1 hours ago
4 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
26 Jan 2026