2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அரண்மனை 2வுக்கு யூ சான்றிதழ்

George   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலா போன்ற இயக்குநர்கள், சமூகக்கதையையே ஏ சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு வன்முறைக்காட்சிகளுடன் எடுக்கிறார்கள். 

ஆனால், சுந்தர்.சியோ பேய்த் திரைப்படத்தையே குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் இரசிக்கும்படி கொமடியான திரைப்படமாக எடுக்கிறார். சந்தானம், வினய், ஹன்சிகா, லட்சுமிராய் நடித்த அரண்மனை திரைப்படம் பேய்த் திரைப்படமாக இருந்தாலும அனைவரும் இரசிக்கும்படி இயக்கினார். 

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி முதலானோர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது  உருவாகியுள்ள அரண்மனை திரைப்படமும் குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருகிறதாம். 

இரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம் இல்லாமல் கலகலப்பான திரைப்படமாக எடுத்துள்ளாராம் சுந்தர்.சி.
எதிர்வரும் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதால் அரண்மனை 2, தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், அனைவரும் பார்க்க கூடியத் திரைப்படம் என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X