Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'லோபர்' திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. தொடர்ந்து 'எம்.எஸ்.தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதனைதொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார். சினிமாவிலும், சமூக வலைதளங்களிலும் தனது கவர்ச்சி தோற்றத்தால் ரசிகர்களை சூடேற்றி வரும் திஷா பதானி அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
திஷாபதானி சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். வீடியோ காட்சிகளை பார்த்த பலர் திஷா பதானி மார்பக அழகுக்காக விலா எலும்பு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
விலா எலும்புகளை அகற்றும் சிகிச்சையில் 11 மற்றும் 12-வது எலும்புகள் நீக்கப்பட்டு விட்டது. இந்த அறுவை சிகிச்சை மூலம் இடுப்பு பகுதி மெல்லியதாகவும், மார்பக பகுதி பெரியதாகவும் மாறும் என தெரிவித்துள்ளனர். ஆனால் விலா எலும்பு சிகிச்சை மிகவும் ஆபத்தானது. இந்த சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும் என பலர் பதிவிட்டுள்ளனர்.
தோற்றம் குறித்து நெட்டிசன்கள் வைரலான விமர்சனங்களை வீசி வரும் நிலையில் திஷா பதானி இது குறித்து எந்த பதிவும் தெரிவிக்கவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .