2025 மே 16, வெள்ளிக்கிழமை

அவதூறு பரப்புவதாக பாபிசிம்ஹா புகார்

George   / 2016 மே 17 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரா ஜாக்கிரதை என்றத் திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் பாபிசிம்ஹா, நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

'நான் கடந்த 3 வருடங்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 

கடந்த சில நாட்களாக சில தினசரி நாளிதழ்களில் நான் யார் என்று கேள்விப்படாத இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் மீரா ஜாக்கிரதை என்னும் திரைப்படத்தில் நான் நடித்துள்ளதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய திரைப்படமான உறுமீன் படங்களை பயன்படுத்துகிறார்கள்.

நான் மீரா ஜாக்கிரதை என்றத் திரைப்படத்தில் நடிக்கவே இல்லை. டப்பிங் பேசவுமில்லை. அந்த திரைப்படத்தின் நாயகியாக கூறப்படும் மோனிகா என்பவரை நான் பார்த்ததுகூட இல்லை. எனவே என் பெயரை தவறாக பயன்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதேவேளை,  பாபிசிம்ஹா, மீரா ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்தது உண்மைதான் என்பதற்கான ஆதரமாக அவர் நடித்த படங்களை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளாராம்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .