Editorial / 2025 நவம்பர் 23 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இந்தாண்டின் ஜென்டில்மேன் ஓட்டுநர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் வழங்கப்பட்ட இந்த விருது குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.
பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியுள்ளதாவது:
தொழில்முனைவோர், கார் ரேஸராக இருந்த பிலிப்பே சாரியோல் சார்பாக வெனிஸில் வழங்கப்படும் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற எனது கணவரின் பக்கத்தில் நிற்க பெருமைப்படுகிறேன் என்றார்.
சமீபத்தில் இந்தியாவின் பத்மபூஷன் விருதை அஜித் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் அஜித்தின் அணி சாதனை படைத்தது.
இப்படி தொடர்ச்சியாக விருதுகளை வாங்கிக் குவிக்கும் அஜித்தால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் நடிக்கவிருக்கிறார்
42 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
2 hours ago