Editorial / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்ற வருடம் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக வைத்திருந்தது போலவே இந்த 4வது சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தி இருக்க போகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் 4வது சீசன் நேற்று ஆரம்பித்து இருக்கிறது. போட்டியாளர்கள் 16 பேரும் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.
முதல் நாள் காட்சிகள் கூட இன்னும் ஒளிபரப்பாகாத நிலையில், தற்போதே நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் போட்டியாளர்கள் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வருடம் நடந்த மூன்றாவது சீசனில் நடிகை வனிதா தான் பல்வேறு பரபரப்பான விஷயங்களுக்கு காரணமாக இருந்தார்.
அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த சமயத்தில் அதிக அளவு பிரச்சனைகளும் ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் .
அது போல இந்த சீசனிலும் ஒரு போட்டியாளர் இருக்கிறார் என தற்போதே நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.
சுரேஷ் சக்கரவர்த்தியின் பெயரை தான் தற்போது நெட்டிசன்கள் இப்படி குறிப்பிட்டு பேசி வருகிறார்கள்.
அவரை பற்றி நேற்று காட்டப்பட்ட வீடியோவில் தனக்கு Obsessive compulsive disorder (OCD) இருக்கிறது என்றும் அனைத்து விஷயங்களுக்கு சரியாக இருக்க வேண்டும் என நினைப்பேன் என எதிர்பார்ப்பேன் என தெரிவித்து உள்ளார்.
"சகிப்பு தன்மை சுத்தமாக கிடையாது" என்றும் அவர் கூறி இருக்கிறார் என்பதால் பிக் பாஸ் 4 வீட்டில் அவர் மற்ற போட்டியாளர்களுடன் எப்படி சகஜமாக இருப்பார் என்றும், அவரால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தற்போது ரசிகர்கள் கணிக்க துவங்கிவிட்டார்கள்.
ட்விட்டரில் அது பற்றி அதிகம் விவாதமும் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி இதே காரணத்திற்காக சீக்கிரம் எலிமினேட் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் பலரும் தெரிவிக்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
16 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago