George / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வருடத்துக்கு ஒரு தமிழ்த்திரைப்படத்தில் நடித்தாலும் அது இரசிகர்களின் மனதில் நிற்கும்படியான கதையாக, கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் மடோனா செபஸ்டியன்.
ஆனால், இதுவரை அவர் கேட்டதில் அந்த மாதிரியான கதையை எந்த இயக்குநரும் சொல்லவில்லையாம். அதனால், தன்னிடம் கதையை சொல்லி பதில் கேட்ட இயக்குநர்களிடம், 'இன்னும் அழுத்தமான கதாபாத்திரங்களுடன் வாருங்கள்' என்கிறாராம் மடோனா.
பிரேமம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவ மடோனா, அதையடுத்து நடித்த காதலும் கடந்து போகும் வெற்றி பெற்றதால் அவரிடம் கதை சொல்ல பல தமிழ் இயக்குநர்கள் படையெடுத்தனர்.
இந்நிலையில், விஷாலுடன் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்பட்டதை மறுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மடோனா, தமிழில் எந்த புதிய திரைப்படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்று கூறியிருந்தார்.
தற்போது பிரேமம் தெலுங்கு ரீமேக் மற்றும் மலையாள திரைப்படமொன்றில் மட்டுமே மடோனா, நடிக்கின்றார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago