2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

இலங்கை வருவதற்கு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தடை

Freelancer   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள நடிகை ஷில்பா ஷெட்டிக்கு இலங்கைக்குச் செல்ல மும்பை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நீதிமன்ற பரிசீலனைக்கு முன்னதாக, அவர் மீதுள்ள 60 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டுகளை முதலில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள தேடுதல் அறிக்கை இன்னும் நடைமுறையில் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. 

இதன் காரணமாக, நீதிமன்றம் அல்லது புலனாய்வு அமைப்பின் அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது. 

வெளிநாடு செல்ல அனுமதி கோருவதற்கு முன்பு, முதலில் 60 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டுகளைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறியது. 
 
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X