Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் ஹொலிவூட் திரைப்படமான குங்பூ யோகாவில் இருந்து நடிகை இலியான நீக்கப்பட்டமை தனக்கு தெரியாது என நடிகை அமைரா தஸ்தூர்
சீனாவின் குங்பூ கலையையும், இந்தியாவின் யோகா கலையையும் இணைத்து உருவாகும் கமர்ஷியல் எக்ஷன் திரைப்படமான இதில், ஜெக்கி ஜானும், சீன நடிகையும் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பதுடன் சோனுசூட் வில்லனாக நடிக்கிறார்.
இந்தியாவில் நடக்கும் கதையில் இந்திய நடிகை ஒருவர் நடிப்பதுடன் நடிகை இலியானான நடிப்பதாக இருந்த நிலையில், என்ன காரணத்தாலோ அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலா தமிழில் அனேகன் திரைப்படத்தில் நடித்த அமைதா தஸ்தூர் நடித்து வருகிறார்.
சீனாவில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு திரும்பி இருக்கும் அமைரா இதுபற்றி கூறும்போது, திடீரென்று குங்பூ யோகா படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டு வந்தார்கள். ஜாங்கிரி சாப்பிட யாராவது கூலி கேட்பார்களா உடனே ஓகே சொன்னேன்.
திரைப்படத்தில் எக்ஷன் காட்சிகள் இருப்பதால் எனது உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்தனர். 20 நாட்கள் தினமும் 4 மணிநேரம் குங்பூ பயிற்சி அளித்தார்கள். இதற்கு முன் ஒரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டதும், அவர் நீக்கப்பட்டதும் பற்றி எனக்குத் தெரியாது' என்கிறார் அமைரா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025