Editorial / 2020 செப்டெம்பர் 18 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல இளம் நடிகரான சபரி நாத் கார்டியாக் அரெஸ்ட்டால் 42ஆவது வயதில் காலமானார்.
மலையாள தொலைக்காட்சிகளில் பிரபலமாக இருந்த நடிகர் சபரி நாத், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
அண்மையில் தொடங்கப்பட்ட பாடாத பைங்கிளி என்ற சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சபரி நாத் வீட்டில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் உடனடியாக திருவனந்தப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே சபரி நாத்தின் உயிர் பிரிந்தது.
சபரி நாத்தின் திடீர் மரணம் மலையாள தொலைக்காட்சி நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .