2025 மே 15, வியாழக்கிழமை

உத்தா பஞ்சாப் இணையத்தில் வெளிவந்தது: படக்குழுவினர் அதிர்ச்சி

George   / 2016 ஜூன் 16 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தணிக்கை விவகாரத்தில் தணிக்கை குழுவை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று, கடைசியில் 'ஏ' சான்றிதழோடு நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் 'உத்தா பஞ்சாப்'. 

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பலரும் 'உத்தா பஞ்சாப்' குழுவினருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நாளை இத்திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட முடிவு செய்திருந்த நிலையில், நேற்று மதியமே இத்திரைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அதிர்ச்சியடைந்த திரைப்படக்குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இணையதளத்தில் இருந்து இத்திரைப்படத்தை நீக்கியுள்ளனர். 

இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டாலும் இந்த விடயத்தால் திரைப்படக்குழுவினர் மிகவும் அதிர்ந்து போயுள்ளனர். 

ஷாகித் கபூர், அலியா பட், கரீனா கபூர் போன்ற பொலிவூட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள இத்திரைப்படத்தை அபிகேஷ் சௌபி இயக்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .