2025 மே 16, வெள்ளிக்கிழமை

உற்சாகத்தில் தமன்னா

George   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை தமன்னா முதன் முறையாக மூன்று மொழிகளில் டப்பிங் பேசுகின்றார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள கார்த்தியின் தோழா திரைப்படத்தில் நடித்துள்ள தமன்னா, பிரபுதேவாவுடன் நடிக்கும் திரைப்படத்தில் தமிழ், தெலுங்கு, ஹந்தி என மூன்று மொழிகளில் நடிக்கிறார். 

அதேபோல், தெலுங்கில் அவர் நடித்து வரும் பாகுபலி 2 மற்றும் ஊபிரி ஆகிய திரைப்படங்களும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. 

இந்த நிலையில், தமிழில் விஜயசேதுபதியுடன் நடித்து வரும் தர்மதுரை திரைப்படத்தில் முதன்முறையாக டப்பிங் பேச தயாராகிக்கொண்டிருக்கும் தமன்னா, தெலுங்கில் நடித்து வரும் ஊபிரி திரைப்படத்திலும் தனக்குத்தானே டப்பிங் பேசப்போகிறாராம். 

அதோடு, பிரபுதேவாவுடன் நடிக்கும் திரைப்படத்தில் மூன்று மொழிகளிலுமே டப்பிங் பேச திட்டமிட்டிருக்கிறாராம். இதில் தமிழ், தெலுங்கு அவருக்கு அந்நிய மொழியாக இருந்தபோதும் ஹிந்தி அவரது தாய்மொழி என்பதால் முதன்முறையாக ஹிந்தியில் டப்பிங் பேசப்போகும் உற்சாகத்தில் இருக்கிறாராம் தமன்னா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .