Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 14 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கபாலி திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் வரி உலகம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இயக்குநர் ப.ரஞ்சித்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை கொட்டி வருகிறார்கள்.
'உலகம் ஒருவனுக்கா..' என தொடங்கும் பாடல்தான் இன்றைய சமூக வலைத்தளங்களின் பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்த பாடலில் வரும் 'கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்' என்ற வரி பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதே பாடலில் வரும் 'மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது' என்ற வரியும் தங்களை ஆதிக்க சாதி என எண்ணுவோரை கடுப்பேற்றியுள்ளது.
'ஆண்டையரின் கதை முடிப்பான்' என்ற பாடல் வரியை திரைப்படத்தில் வைத்ததன் மூலம், ப.ரஞ்சித் தனது முதலெழுத்தில் உள்ள 'ப' வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிவிட்டார் என்று அவரது ஜாதியை குறி வைத்து ஒரு மோசமான பேஸ்புக் பதிவையும் காண கிடைத்தது.
எல்லோருமே ஆண்டையர்தான் முன்பெல்லாம் மேட்டுக்குடி என்பது குறிப்பிட்ட ஒரு ஜாதியினரின் வார்த்தை பிரயோகமாக இருந்தது.
இப்போது தலித் தவிர்த்த பிற ஜாதியினரில் பெரும்பாலானோர் தங்களை ஆண்டையர் எனவும், மேட்டுக்குடி எனவும் கருத்திக்கொள்வதால், பாடலுக்கான எதிர்ப்பும் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
ஆதரவு குரல்கள் அதேநேரம், நடுநிலைவாதிகளும், தலித் ஆதரவு எழுத்தாளர்களும், சமூக நோக்கர்களும், பாடலுக்கு ஆதரவு தருகிறார்கள். ரஞ்சித் நெற்றிப்பொட்டில் அடித்துள்ளார் என்கிறார்கள் அவர்கள்.
'எஜமான் காலடி மண்ணெடுத்து, நெற்றியில பொட்டு வைப்போம்..' என்ற பாடலை ரசித்தவர்கள், 'ஆண்டையரின் கதை முடிப்போம்..' என்றால் மட்டும் அலறுவது ஏன்? என்ற கேள்வியும் இங்கு எழாமல் இல்லை.
பேஸ்புக், டுவிட்டர் என எங்கு பார்த்தாலும், ஆதிக்க ஜாதியா, அதை ஒடுக்க நினைக்கும் ஒடுக்கப்பட்ட ஜாதியா.. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விவாதங்களே அதிகமாக காணப்படுகின்றன.
கபாலி திரைப்படம் வெளியாகும்போது, இந்த பாடல் வரிகளால் ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ என்ற அச்சம் திரைப்படக்குழுவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago