2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கை தளர்த்துவது ஆபத்து; நடிகர் பார்த்திபன் எதிர்ப்பு

A.K.M. Ramzy   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

கொவிட்-19 பரவலைத்  தடுப்பதற்கான ஊரடங்கு அடுத்த மாதம் 3ஆம் திகதி  வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், ஐ.டி. நிறுவனம் உள்ளிட்ட சில துறைகளுக்கான 

ஊரடங்கை நாளை  முதல் தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நடிகர் பார்த்திபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“கொவிட்-19 பாதித்தவர்கள் எண்ணிக்கை இரண்டு நாள்களுக்கு முன்பு 25 ஆக

இருந்தது. மறுநாள் மீண்டும் 56 ஆக உயர்ந்தது. 20ஆம் திகதியில் இருந்து ஊரடங்கை நாம் தளர்த்தினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதை

கட்டுப்படுத்த மேலும் 2 மாதங்கள் தேவைப்படும். மக்களே மே 3ஆம் திகதி வரை சிரமத்துக்கு இடையிலும் ஊரடங்கை கடைப்பிடிக்க தயாராகி விட்டனர்.

ஆனால், இந்த ஊரடங்கை ஐ.டி. கம்பெனிகளுக்காக தளர்த்து வது சரியல்ல. அந்த நிறுவனங்கள் குறைந்த அளவு ஆட்களை வைத்து வேலை செய்யவேண்டும் என்று

சொல்கிறார்கள். அங்கு 50 பேர் வேலை செய்கிறார்களா? அல்லது 100 பேர் வேலை செய்கிறார்களா? என்பது யாருக்கும் தெரியாது. அப்படி தளர்த்தினால் கொவிட்-19

தொற்று மேலும் அதிகமாகி, விளைவுகளை நம்மால் சந்திக்க முடியாது. பெரிய மருத்துவ வசதி உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளே சமாளிக்க முடியவில்லை.

இதனால் 20ஆம் திகதி தளர்த்துவது சரியாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை அமைச்சரிடம் தெரிவித்தேன். ஊரடங்கை கடுமையாக

கடைப்பிடித்தால் 10 நாட்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம், தளர்த்துவது ஆபத்து என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன் இவ்வாறு பார்த்திபன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X