2025 மே 16, வெள்ளிக்கிழமை

எங்களுக்கும் காலம் வரும்

George   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் சினிமாவில் பெண்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடைக்கும் என பொலிவூட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி திரையுலகில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லையே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு  பதிலளிக்கையில் சோனம் இதனை தெரிவித்துள்ளார்.

'நான் எனது 23ஆவது வயதிலிருந்தே முக்கியத்துவம் பெற முயற்சித்து வருகிறேன். கடந்த 9 ஆண்டுகளாக என் இலட்சியத்தை அடைய போராடி வருகிறேன். நான் பிரேம் ரத்தன் தன் பயோ என்ற திரைப்படத்தில் நடித்தேன். இது பொக்ஸ் ஒபிஸில் நல்ல வசூலை பெற்றதுடன் எனக்கும் ஒரு நல்ல ரோலை தந்தது.

இந்தத் திரைப்படத்தில் சல்மான்கான் 200 நாட்கள் நடித்தார், நான் 180 நாட்கள் பணியாற்றினேன். நடிகருக்கு சமமான ரோல், இதுவே ஒரு முன்னேற்றம் தான். என்னைப் போன்று மற்ற நடிகைகளும் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களில் நடித்தால் முன்னேறலாம். எதிர்காலத்தில் நிச்சயம் மாற்றம் வரும்' என்றார்.

சோனம் கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான 'நீர்ஜா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் மறைந்த விமான பணிப்பெண் நீர்ஜாவாக, சோனம் கபூர் நடித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .