Janu / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்நீச்சல் தொடரில் கிருஷ்ணசாமி மெய்யப்பன் பாத்திரத்தில் நடித்த RJ நெலு இலங்கையில் மட்டக்களப்பபை சேர்ந்தவர். அவரது நடிப்பில் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட "போடியார்" எனும் திரைப்படம் இம்மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வருகின்றது.
Visual Art Movies நிறுவனத்தின் சார்பில் க. அருளானந்தம், சதா.சண்முகநாதன் மற்றும் ப.முரளிதரன் ஆகியோரின் தயாரிப்பிலும், கோடீஸ்வரனின் இயக்கத்திலும் உருவாக்கப்பட்டுள்ள போடியார் திரைப்படத்திற்கு AJ சங்கர்ஜன் இசையமைத்திருக்கிறார்.
கடந்த 01-08-2024 அன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ப.முரளிதரனினால் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி , வெளியிடப்படும் திரையரங்குகள் மற்றும் காட்சி நேரங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மண் வாசனையுடன் கூடிய படுவான்கரை எனும் பிரதேச வாழ்வியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஓர் படைப்பாக இத்திரைப்படம் காணப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அண்மைக்காலமாக இலங்கை தமிழ் சினிமாவின் வர்த்தக அந்தஸ்த்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. அதில் Visual Art Movies நிறுவனம் முனைப்புடன் செயற்பட்டு வருவதும், RJ நெலுவிற்கு எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னரே போடியார் திரைப்படத்தில் நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு சென்னைக்கு வந்த நெலுவிற்கு பல போராட்டங்களுக்கு பிறகு தான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இலங்கையில் ஒரு சில ஷார்ட் பிலிம்களை இயக்கியும், நடித்தும் பிரபலமாக இருந்த இவருக்கு தமிழில் முதல் சீரியலே பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது. அதிலும் இவருடைய முதல் நாள் அறிமுக காட்சி யாரும் எதிர்பார்க்காத அளவிலிருந்தது. முதல் நாள் இவருடைய அறிமுகத்தை பார்த்து ரசிகர்கள் யார் இவர் என்று இணையத்தில் தேடிக் கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் சீரியலின் கதைப்படி இவருடைய கேரக்டரை ரசிகர்கள் திட்டிக் கொண்டிருந்தாலும் அந்த திட்டுகள் கூட தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இவர் பேட்டியில் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் நெலுக்கு தமிழ் ரசிகர்களின் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு பார்த்து அவருடைய சொந்த ஊரில் பிரம்மாண்டமாக வரவேற்பு வைத்திருந்தனர்
அவருடைய கிராமத்தினர் நெலுவின் வளர்ச்சியை பார்த்து தங்கள் வீட்டில் ஒருவர் வெற்றி பெற்றதாகவே கொண்டாடி இருந்தனர். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதிலும் இயக்குனர் பாரதிராஜா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் அசிஸ்டன்ட் கேமராமேனாக வேலை பார்த்திருக்கிறார்.
அதுபோல நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பாக்கியராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த "ரூத்" (இது போது வழி அல்ல) என்ற திரைப்படத்தில் நெலு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதோடு இந்த திரைப்படத்தை "லோகு கிருஷ்ணா" இயக்கி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .