J.A. George / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடர்பான அறிவிப்பு டிசெம்பர் 31ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
இந்த நிலையில் தான் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இன்னும் 40% பணிகள் மட்டுமே தன்னுடையது இருப்பதாகக் கூறிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு நடித்து முடிப்பேன் என்று உறுதி கூறினார்.
இதனையடுத்து, ரஜினிகாந்த் தான் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிக்காந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .