Ilango Bharathy / 2021 ஜூன் 22 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்-வினோத் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வலிமை. நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இத் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பொலிவூட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே வலிமை அப்டேட் கேட்டு போராடி வரும் அஜித் ரசிகர்களுக்காக அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் `இத்திரைப்படத்தில் தாயைப் போற்றும் ஒரு பாடல் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் படத்தின் ஆரம்பப் பாடல் சிறப்பாக வந்துள்ளதாகவும் `யுவன் சங்கர்ராஜா தெரிவித்துள்ளார். இத்தகவலானது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
33 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
56 minute ago
1 hours ago