2024 நவம்பர் 02, சனிக்கிழமை

‘கங்குவா 2’ எப்போது? : படக்குழுவின் ப்ளான்

Editorial   / 2024 ஒக்டோபர் 27 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘கங்குவா 2’ படத்தினை எப்போது தொடங்கி, எப்போது வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 14-ம் திகதி வெளியாகவுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளதால், பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது படக்குழு.

‘கங்குவா’ முதல் பாகத்தின் முடிவில் கார்த்தி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இதன் தகவல் இணையத்தில் வெளியாகிவிட்டது. படத்தின் டீஸரில் இறுதியில் வருபவர் கார்த்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கங்குவா’ 2-ம் பாகத்தில் சூர்யா - கார்த்தி இருவரும் மோதுவது தான் கதையாக உருவாக்கி வைத்துள்ளார் சிவா. இதற்கான கதை, திரைக்கதை என அனைத்தையும் முடித்துவிட்டார். ஆனால், அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அஜித் படத்தினை முடித்துவிட்டு தான் ‘கங்குவா 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் சிவா. இதன் படப்பிடிப்பு 2026-ம் ஆண்டு தான் தொடங்கவுள்ளது. 2027-ம் ஆண்டு வெளியிட்டு விட வேண்டும் என படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கு தகுந்தாற் போல் சூர்யா - கார்த்தி இருவரிடமும் திகதிகள் பேசி வருகிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .