2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

காட்டுவதற்கு நான் ரெடி

Mayu   / 2024 செப்டெம்பர் 24 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


பல பாலிவுட் நட்சத்திரங்கள் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் இருந்து விலகி தங்கள் சொந்த தொழில் பக்கம் நடையைக் கட்டிய செய்திகளும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்  நடிகை திரிப்தி திம்ரி தனது சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளார்.

பெரும்பாலான நடிகர்கள், திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் துறைகளில் இருந்தாலும், தங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இதற்கமைய, ஒரு படத்தில் சுமார் அரை மணி நேரம் நடித்து, ஒரே இரவில் பாலிவுட் இண்டஸ்ட்ரியில் பிரபலமான ஒரு நடிகை என்றால் அது, திரிப்தி திம்ரிதான். தொடக்கத்தில் ஒரு படத்திற்கு 40 லட்சம் சம்பளமாக பெற்ற நடிகை தற்போது ரூபாய் 10 கோடி கேட்கிறாராம். திரிப்தி திம்ரி, ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தில் ஓவர் கிளாமரில் நடித்திருந்தார். படத்தில் திரிப்தி திம்ர மற்றும் ரன்பீர் கபூரின் கெமிஸ்ட் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இருப்பினும், தற்போதைய வெற்றியின் காரணமாக திரிப்தி திம்ரி தனது சம்பளத்தை ரூபாய் 10 கோடியாக உயர்த்தியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .