Editorial / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல மாடல் மற்றும் நடிகையான 24 வயது காயா கெர்பர், தனது காதலர் லூயிஸ் புல்மேனுடன் (Lewis Pullman) மெக்சிகோவில் கோடை விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்.
மெக்சிகோ கடற்கரையில் நீல நிற நீச்சல் உடையில் காயா கெர்பர் தனது கட்டுக்கோப்பான உடல்வாகை வெளிப்படுத்தியவாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை, காட்சியளித்தார். 33 வயதான தனது காதலர் லூயிஸ் புல்மேனின் கைகளைப் பிடித்தபடி, அவர் கடலில் இறங்கி விளையாடும் காட்சிகள் புகைப்படக் கலைஞர்களின் கேமராவில் சிக்கின.
மிகக் குறைந்த ஒப்பனையுடன், லேசான கண் மேக்கப் மற்றும் இதழ் வர்ணம் பூசி காயா மிக அழகாகக் காட்சியளித்தார். அவரது நீண்ட கருநிறக் கூந்தல் காற்றில் பறக்க, இயற்கையான தோற்றத்தில் அவர் ஜொலித்தார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக காயாவை காதலித்து வரும் நடிகர் லூயிஸ் புல்மேன், சட்டை அணியாமல் கறுப்பு நிற நீச்சல் உடையில் தனது கட்டுக்கோப்பான உடலமைப்பை வெளிப்படுத்தினார்.
திரைப்படப் பணிகளில் பிஸியாக இருக்கும் இந்த ஜோடி, சிறிது காலம் ஓய்வு எடுப்பதற்காக இந்த மெக்சிகோ பயணத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago