2025 மே 16, வெள்ளிக்கிழமை

கட்சி ஆரம்பிக்கிறார் கருணாஸ்

George   / 2016 ஜூன் 02 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கருணாஸ், விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். கருணாஸ் தற்போது முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பின் சார்பில் அ.தி.மு.க ஆதரவுடன் திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது அமைப்பு சாதி அமைப்பாக இருப்பதால் அதனை அரசியல் கட்சியாக மாற்ற இருக்கிறார்.

இதுகுறித்து கருணாஸ் கூறியிருப்பதாவது, 'ராமதாஸ், திருமாளவன், சரத்குமார் உள்ளிட்ட பலர் சாதியின் பின்புலத்தில் கட்சி நடத்தினாலும் அவர்கள் அரசியல் கட்சிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் 6 கட்சி கொடியை பயன்படுத்திய என்னால் என் அமைப்பின் கொடியை பயன்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் சாதி அமைப்பு என்ற முத்திரை.

எனவே, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை பதிவு பெற்ற அரசியல்கட்சியாக மாற்ற முடிவெடுத்திருக்கிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவனாக இருக்க விரும்புகிறேன்' என்கிறார் கருணாஸ்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .