2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கனவு நனவானது: ஒஸ்கார் நாயகனானார் டிகாப்ரியோ

George   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டும், வருங்காலத்துக்கு இந்த உலகத்தை பசுமையோடு விட்டுச் செல்ல வேண்டும் என 88ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை வென்ற லியானார்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற ஹொலிவூட் நடிகர் டிகாப்ரியோ, பல வருடங்களாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார், பலமுறை பரிந்துரைக்கப்பட்டபோதும் ஒருமுறைக் கூட அவருக்கு ஒஸ்கார் விருது கிடைக்கவில்லை.

ஒஸ்கார் கனவு நிறைவே, கடந்த வருடம் தி பேர்ட்மேன் திரைப்படத்துக்காக ஒஸ்கார் விருதினை வென்ற இயக்குநர் அலெஹாண்ட்ரோ கோன்சலஸ் இன்னாரிட்டுவுடன் த ரெவனண்ட் திரைப்படத்தில் இணைந்தார். கோல்டன் குளோப், பாப்டா விருதுகளை வென்ற டிகாப்ரியோ, ஒஸ்கார் விருதினையும் வென்று தனது வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X