2025 மே 15, வியாழக்கிழமை

கபாலி டீஷேர்ட் விற்பனை சூடுபிடிப்பு

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில காலமாக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ரஜினியின் கபாலி.

அண்மையில், வெளியான கபாலி டீசரை 2 கோடிக்கும் அதிகமானோர் இணைய தளத்தில் பார்த்தனர். இது உலக அளவில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறுகிறது. 

ரஜினி இளமையாகவும், இப்போதைய தோற்றத்திலும் நடித்திருக்கும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகின்றது.

அதனையடுத்து, ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விதம் விதமாக கபாலி டிசேர்ட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

இதில் ரஜினியின் பல்வேறு கபாலி தோற்றம், மலேசிய பின்னணியிலான கோபுரங்களுடன் ரஜினி இருக்கும் நிழற்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

இந்த டிசேர்ட் 350 முதல் 600 இந்திய ரூபாய் வரை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விற்பனைக்கு வந்துள்ளதுடன் விற்பனை சூடு பிடித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .