Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஜூலை 26 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கபாலி திரைப்படம் வெளியாவதுக்கு முன்பிருந்ததை விட வெளியான பின்தான் செய்திகளில் அதிகமாக அடிபட்டு வருகிறது.
வெளியீட்டுக்கு முதல் நாள் வரை கபாலிடா... நெருப்புடா... என்று கூவிக் கொண்டிருந்தவர்கள் கூட திரைப்படம் பார்த்தபின் மாற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
ரஜினி ரசிகர்கள் யாரும் அப்படிப் பேசவில்லை. சமூக வலைத்தளங்களில், எங்கே தங்களது அபிமான நடிகர்களின் வசூலை ரஜினிகாந்த் முறியடிக்க முடியாத அளவுக்கு கொண்டு போய்விடுவாரோ என்ற பயத்தில்தான் தங்களை அடுத்த சூப்பர் ஸ்டாராக நினைத்துக் கொண்டிருக்கும் சில நடிகர்களின் ரசிகர்கள் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
22, 23, 24 ஆகிய மூன்று நாட்கள், அதற்கு முன்னதாக சிறப்புக் காட்சிகள் என மொத்தமாக வசூல் என்ன என்று பார்த்தால் அது இந்திய ரூ.300 கோடியைக் கூடத் தொடலாம் என பொலிவூட்டில் உள்ள பல பொக்ஸ் ஒபிஸ் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஹிந்தித் திரையுலகில் உள்ள பலருக்கும் „கபாலி... வசூல் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஒரு பக்கம் திரைப்படத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்க எப்படி கபாலி திரைப்படம் வசூலை அள்ளுகிறது என அவர்கள் சில சந்தர்ப்பங்களில் தங்களது எரிச்சலையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஹிந்தியில் „தூம் 3... திரைப்படம்தான் வெளிநாடுகளில் முதல் வார முடிவில் இந்திய ரூ.70 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது. தற்போது, இந்திய ரூ.87 கோடிவரை வசூலித்து அந்த சாதனையை கபாலி முறியடித்துள்ளது என்கிறார்கள்.
பொலிவூட்டின் மிகப் பெரும் வசூல் திரைப்படங்களான „தூம் 3, சுல்தான், தில்வாலே, பஜ்ரங்கி பைஜான்... ஆகியவை பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வெளியாகின. ஆனால், கபாலி ஒரு சாதாரண நாளில் வெளியாகி இவ்வளவு வசூலைப் பெற்றுள்ளது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நேற்று மாலை வெளியான, முதல் 3 நாட்களுக்கான தமிழக வசூல் நிலவரத்தின்படி தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் இந்திய ரூ.100 கோடிக்கும் அதிகம் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனை தயாரிப்பாளர் தாணுவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுவரை எந்த தென்னிந்திய சினிமாவும் முதல் 3 நாட்களிலேயே சொந்த மாநிலத்தில் மட்டும் இந்திய ரூ.50 கோடி வசூலைப் பெற்றது கிடையாது.
தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் கடந்த வருடம் வெளிவந்த பாகுபலி, புரிந்த சாதனைகளையும் கபாலி தகர்த்துள்ளது. இந்த வாரமும் கபாலி, அதே வரவேற்புடன் ஓடினால் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என்கிறார்கள்.
ஹிந்தித் திரையுலகமும், தெலுங்குத் திரையுலகமும் ஒரு தமிழ்த் திரைப்படம் புரிந்த சாதனையைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இங்குள்ள சிலரோ அதைக் கொண்டாடாமல் கபாலி திரைப்படத்தில் உள்ள நண்டு கதையைப் போலவே நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் கவலைக்குரியது.
Deepak Tuesday, 26 July 2016 08:25 AM
Super ra,..soniga
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago