Freelancer / 2023 நவம்பர் 01 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி.

அதையடுத்து தனுஷ் உடன் இணைந்து ‘3’படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உச்ச நடிகையானார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஸ்ருதி ஹாசன் நடித்து வந்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க நடித்து வந்தார்.

ஸ்ருதி ஹாசன் சிறந்த பாடகியும் கூட.தமிழில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் காதலனுடன் வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது வழக்கம் போன்றே வித்தியாசமாய் போஸ் கொடுக்கிறேன் என்று சொல்லி “கருப்பு காட்டேரி” போன்று போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளார். M


40 minute ago
44 minute ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
05 Mar 2026