J.A. George / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் திகதி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
அவ்வாறு திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதித்தால் ’கர்ணன்’ வெளியீடு ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 9ஆம் திகதி’கர்ணன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.
மேலும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டகாசமான ’கர்ணன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே ’கர்ணன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ள நிலையில் இந்தத் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
27 minute ago
6 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
6 hours ago
27 Jan 2026