2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கூலி குறித்து ரஜினியின் மனைவி என்ன சொன்னார்

Editorial   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூலி திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்துள்ளனர். 

இந்தப் படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. இதில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். 

மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான சௌபின் ஷாஹிர், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

முன்னதாக, இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் கதை குறித்த தகவல்களும் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கூலி திரைப்படத்தின் புக்கிங், வார் 2 திரைப்படத்தை விட அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது, 

கூலி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், படம் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

  ஆகஸ்ட் 14-ம் திகதி கூலி திரைப்படம் வெளியாகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .