2025 மே 16, வெள்ளிக்கிழமை

கல்லூரிக்கு முழுக்கு போட்ட லட்சுமிமேனன்

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை லட்சுமிமேனன் தானாகவே கல்லூரியிலிருந்து விலகிக் கொண்டுள்ளதுடன் தபால் மூலம் படிப்பை தொடர முடிவு செய்துள்ளாராம்.

எனக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்று கல்லூரிக்கு சென்ற ஆரம்பத்தில் பேட்டி கொடுத்த லட்சுமிமேனன், சில திரைப்படங்களையும் தவிர்த்து வந்தார்.

நாட்கள் செல்ல, செல்ல புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமான நிலையில் படபிடிப்பு, படிப்பு என்று திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அடிக்கடி விடுமுறை எடுத்ததால்; கல்லூரி நிர்வாகம், பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்தது. அடிக்கடி விடுமுறை எடுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்குவோம் என்று கூறியது.

முதல் செமஸ்டரை எழுதிய நிலையில் அடுத்த செமஸ்டருக்கு போதிய வருகை பதிவு இல்லை என்று கூறி கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி தரவில்லை.

எந்த நேரமும் கல்லூரியிலிருந்து நீக்கப்படலாம் என்ற நிலையில் தானாகவே விலகியுள்ளார் லட்சுமிமேனன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .