George / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை காஜல் அகர்வால் என்றாலே கவர்ச்சி பொம்மை என்றாகி விட்டதால் அதனை மாற்றியமைக்கும் வகையில், முன்னணி நடிகைகள் ஏற்க விரும்பாத வேடத்தில் தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
பொதுவாகவே, காஜல் அகர்வாலை ரொமான்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே இயக்குநர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். கவர்ச்சி விடயத்தில் தமிழில் அடக்கி வாசித்தபோதும், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் அங்குள்ள முன்னணி நடிகைகளுடன் போட்டா போட்டியில் இறங்கி நடித்து வரும் காஜல், சிலத் திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடித்தும் இரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது ஹிந்தியில் நடித்து வரும் டு லப்ஸான் கி கஹானி -என்றத் திரைப்படத்தில் அவர் கண் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து வருகிறார்.
முதன்முறையாக தனக்கு சவாலான ஒரு வேடம் கிடத்திருப்பதால் இதில் பெரிய அளவில் நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்து, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறாராம்.
அதனால் இந்த பார்வை இல்லாத வேடத்துக்காக பார்வையற்ற பிள்ளைகளின் பள்ளிக்கு சென்று அவர்களின் செயல்பாடுகளை கவனித்து அதற்கேற்ற நடிப்பை கொடுக்க தன்னை தயார்படுத்தியுள்ளாராம் காஜல்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025