2025 மே 07, புதன்கிழமை

காதலில் விழுந்த வில்லன்

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் வித்யூத் ஜாம்வால் நடிகை அடா சர்மாவை காதலிப்பதாக மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யூத் ஜாம்வால், அஜித்குமாரின் பில்லா-2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய திரைப்படங்களிலும்  நடித்திருந்தார்.

அவரது அண்மைய பேட்டி ஒன்றில் நடிகை அடா சர்மா பற்றியும் காதல் பற்றியும் கூறியுள்ளார். 

"எனக்கு அடா சர்மா தோழி மட்டுமல்ல. நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள். அடா சர்மா போல் ஒருவரை விரும்புகிறேன்" என்று தெரிவித்து இருந்தார்.

தற்போது அவர் அளித்துள்ள இன்னொரு பேட்டியில், "நான் காதலில் இருக்கிறேன். இப்போதுதான் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வித்யூத் ஜாம்வால் காதலிக்கும் பெண் நடிகை அடா சர்மாதான் என்றும், காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் ஹிந்தி பட உலகில் பேசப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X