2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கொரோனா ஊரடங்கில் நடிகரின் திருமணம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் ‘யமுனா’ படத்தில் கதாநாயகனான நடித்தவர் சத்யா. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற மெட்ரோ படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

இன்னொரு புதிய படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வருகிறது.

சத்யாவுக்கும் மகாலட்சுமி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் கரூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று நடந்தது.

கொரோனா ஊரடங்கினால் பாதுகாப்பு கருதி மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X