Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 03 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் நடிகைகளான ப்ரீத்தி ஜிந்தா மற்றும் பிபாஷா பாசு ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இந்நிலையில், இவர்களது திருமண முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தற்போது 40 வயதாகின்றதுடன் பிபாஷா பாசுக்கு இப்போது 35 வயது. பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து வருகிறார். ப்ரீத்தி ஜிந்தாவோ அமெரிக்காவை சேர்ந்த ஜீன் என்பவரை காதலிக்கிறார்.
தனது திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்துவதன் காரணமாக பிபாஷா, திருமணத்தை பற்றி இப்போது யோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ப்ரீத்தி ஜிந்தா, திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்ட நிலையில், அவர் காதலிக்கும் அமெரிக்காவை சேர்ந்த மாப்பிள்ளை சில மாதங்கள் போகட்டும் என்று கூறியிருப்பதால் திருமணம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .