2025 மே 15, வியாழக்கிழமை

காதல் கிசுகிசு

George   / 2016 ஜூன் 20 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் கிசுகிசுக்களிலிருந்து எந்த நடிகையும், நடிகரும் தப்பியதில்லை. சிலருக்கு காதல் கிசுகிசு ஒருவருடனே முடிந்து, அவர்களுடனே திருமணமும் நடந்துவிடும். சிலருக்கு கிசுகிசுவாக மட்டுமே முடிந்து விடும். 

சிலருக்கோ அந்த கிசுகிசு ஆள் மாறி மாறி தொடர்ந்து கொண்டேயிருக்கும். கடந்த சில வருடங்களாகவே காதல் கிசுகிசுவில் அதிகம் இடம் பெற்றவர் நயன்தாரா. அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் அஞ்சலி.

இயக்குநர், தயாரிப்பாளர், அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர் ஆகியோரைத் தொடர்ந்து அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என மீண்டும் காதல் கிசுகிசு பரவி வருகிறது.

அஞ்சலியின் பிறந்த நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த போது நடிகர் ஜெய், 'இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஞ்சு' என்று செல்லமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 

பதிலுக்கு அஞ்சலியும், 'நன்றி ஜெ... இதுதான் என்னுடைய சிறந்த மற்றும் மிக மகிழ்ச்சியான பிறந்த நாள், என்னுடன் எப்போதும் இரு' என்று தெரிவித்துள்ளார். 

இந்த இரண்டு வார்த்தைப் பரிமாற்றங்களும் டுவிட்டரில் அனைவருக்கும் தெரியும்படி மீண்டும் நடந்திருப்பதுதான் அஞ்சலி, ஜெய் காதல் பற்றிய அடுத்த கிசுகிசு வரக் காரணமாமக அமைந்துள்ளது.
ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .