Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 ஜனவரி 20 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் நடித்த ஒரு திரைப்படம் இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முன்பாகவே முதலிடத்துக்கு ஆசைப்படுகிறார் ரஜினி முருகன் திரைப்படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாராதான். கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்து, தன்னுடைய நடிப்பாலும் பேசப்பட்டவர் அவர்தான்.
பத்து வருடங்களுக்கும் மேலாக இன்னமும் அதே புகழில் இருந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சிம்ரன், த்ரிஷா, நயன்தாரா என நம்பர் ஒன் இடம் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கிறது.
நான்கைந்து வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த பின்தான் புது நடிகைகளும் முதலிடத்துக்கு ஆசைப்படுவார்கள்.
இந்நிலையில், கீர்த்தி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த ஆண்டில் நான்தான் முதலிடத்தில் இருந்தேன் என வருடக் கடைசியில் அனைவரும் சொல்ல வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று சொல்லியிருக்கிறார்.
இவர் நாயகியாக அறிமுகமான இது என்ன மாயம் வந்த அடையாளம் கூடத் தெரியாமல் மாயமாய் போய்விட்டது. நாயகியாக நடித்த ரஜினி முருகன் நீண்ட இழுபறிக்குப் பிறகு பொங்கலுக்குத்தான் வெளிவந்தது. கீர்த்தி சுரேஷ் இராசி இப்படி இருக்கிறதே என இயக்குநர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
அது தொடர்வதுதான் ஆச்சரியமானது. பொபி சிம்ஹா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித் பாம்பு சட்டை திரைப்படம் முடிவடைந்து சில மாதங்களாகியும் அப்படியே கிடப்பில் உள்ளது. என்னதான் ரஜினி முருகன் வெற்றியைப் பெற்றாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் கிடப்பில் போடப்படும் இராசியை நினைத்து இவரை அணுக இயக்குநர்கள் தயங்குகிறார்களாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
2 hours ago