Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக (சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை) கருதப்படும் கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் நட்சத்திர ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முறை நடைபெற்ற 73ஆவது கோல்டன் குளோப் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்களில் „தி ரெலவன்ட்... மற்றும் மார்ஷியன் ஆகியத் திரைப்படங்கள் அதிக விருதுகளை பெற்று முன்னிலை வகித்தன.
மெக்சிகோவை சேர்ந்த பிரபல இயக்குநரான அலெஜான்ட்ரோ கொன்ஸலெஸ் இனரிட்டு இயக்கத்தில் அண்மையில் வெளியான „தி ரெலவென்ட் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய விருதுகளை பெற்றுக்கொண்டது.
பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவமாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் லியோனார்டோ டிகேப்ரியோ, கரடியால் தாக்கப்பட்டு, குற்றுயிராக கிடந்து, அங்கிருந்து தப்பிவரும் கதையம்சமும் கதைக்கேற்ப பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய லியோனார்டோ டிகேப்ரியோ சிறந்த நடிகராக தெரிவானார்.
அதேவேளை, தாய்க்கும் மகளுக்குமிடையிலான மென்மையான பந்தத்தை கருவாக வைத்து எடுக்கப்பட்ட „ரூம்... என்றத் திரைப்படத்தில் தாய்மையின் உள்ளுணர்வுகளை தனது சிறப்பான நடிப்புத்திறனால் மெருகூட்டி, வெளிப்படுத்திய பிரையி லார்சன் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை தட்டிச்சென்றார்.
சிறந்த திரைப்படம் - நாடகம் என்ற பிரிவில் போட்டியிட்ட „தி ரெலவன்ட் திரைப்படம் முதலிடத்தை வென்றது. சிறந்த திரைப்படம் - இசை அல்லது நகைச்சுவை பிரிவில் தி மார்ஷியன் திரைப்படம் முதலிடத்துக்கு தெரிவானது.
கோல்டன் குளோப் 2016 விருதுகளின் விவரம்
சிறந்த நடிகர் -- லியோனார்டோ டிகேப்ரியோ (தி ரெலவன்ட்)
சிறந்த நடிகை -- பிரையி லார்சன் (ரூம்)
சிறந்த நடிகர் -- (இசை, நகைச்சுவை )
மாட் டாமோன் (தி மார்ஷியன் )
சிறந்த நடிகை -- (இசை, நகைச்சுவை ) ஜெனிபர் லோவ்ரன்ஸ் (ஜோய்)
சிறந்த துணை நடிகர் -- சில்வஸ்டர் ஸ்டாலோன் ( கீரீட் )
சிறந்த துணை நடிகை -- கேட் வின்செல்ட் (ஸ்டீவ் ஜொப்ஸ்)
சிறந்த இயக்குநர் -- அலெஜான்ட்ரோ கொன்ஸலெஸ் இனரிட்டு (தி ரெலவன்ட்)
சிறந்த திரைக்கதை --ஆரோன் சொர்கின் (ஸ்டீவ் ஜொப்ஸ்)
சிறந்த மதிப்பெண் -- என்னியோ மொரிஸ்கோன் (தி ஹேட்புல் எய்ட்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் -- இன்சைட் அவுட்
சிறந்த பாடல் -- ரைட்டிங்ஸ் ஒன் த வோல் (ஸ்பெக்டர்)
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் -- சன் ஒப் சவுல் (ஹங்கேரி)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் -- மிஸ்டர் ரோபோட் (அமெரிக்கா)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் (இசை, நகைச்சுவை) -- மொஷார்ட் தி ஜங்கல்
சிறந்த வரையறுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர் -- உல்ப் வோல்
சிறந்த தொலைக்காட்சி நடிகர் -- ஜோன் ஹம் (மேட் மேன்)
சிறந்த தொலைக்காட்சி நடிகர் (இசை, நகைச்சுவை ) -- கெல் கார்சியா பெர்னால் மொஷார்ட் (தி ஜங்கல்)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகை -- தராஜி பி.ஹேன்சன் (எம்பயர்)
சிறந்த தொலைக்காட்சி நடிகை (இசை, நகைச்சுவை) -- ரசல் ப்லூம் (கிரேஸி எக்ஷ் கேர்ள் பிரண்ட்)
சிறந்த முன்னணி பாத்திர நடிகர் (தொலைக்காட்சித் தொடர்) -- ஒஸ்கார் ஐஷக் (ஷோ மீ எ ஹீரோ)
சிறந்த துணைநடிகர் ( தொலைக்காட்சித் தொடர்) -- கிறிஸ்டியன் ஸ்லேட்டர் (மிஸ்டர் ரோபோட்)
சிறந்த முன்னணி பாத்திர நடிகை (தொலைக்காட்சித் தொடர் ) -- மௌரா டியர்னி (தி எபைர்)
சிறந்த துணைநடிகை (தொலைக்காட்சித் தொடர்) -- லேடி ககா (அமெரிக்கன் ஹீரோ ஸ்டோரி: ஹோட்டல்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
40 minute ago
1 hours ago