George / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பொலிவூட் நடிகை சன்னி லியோனிடம் அருவறுக்கத்தக்க ஆபாச கேள்விகள் கேட்ட தொகுப்பாளருக்கு ஹிந்தி பிரபலங்கள் பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சி அலைவரிசைக்கு சன்னி லியோனை நேர்காணல் செய்த தொகுப்பாளர் பூபேந்திரா சௌபே, சில சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு, அது சன்னி லியோனுக்கு ஆதரவாக முடிந்துள்ளது.
நிறைய திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களால் உங்கள் மீது பயமாக உள்ளனர், இதில் உங்களுக்கு அக்கரை இல்லையா?
நீங்கள் அமீர் கானுடன் நடிக்க விரும்பலாம் ஆனால் அமீர் கான் உங்களுடன் நடிக்க விரும்புவாரா?
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய உரையில் இந்திய அறநெறிகள் கெடுவதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்கிறார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
சன்னி லியோன் இந்தியாவின் புதிய விளம்பர தூதராக வந்தால், அது ஒரு ஆபத்தான போக்காக மாறாதா? என்ற கேள்விகளை கேட்டதுடன்இந்தியாவில் ஆபாச திரைப்படங்கள் பார்ப்பது அதிகமாவது சன்னிலியோனால்தான் என்னும் தொனியியில் கேள்விகளை கேட்டுள்ளார்.
இவரின் அருவறுக்கத்தக்க கேள்விகளுக்கு சன்னி லியோன் மிகவும் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனும் பதில் அளித்ததுடன் இதே கேள்விகள் இவர் வேறு யாரவது ஒரு பிரபலத்திடம் கேட்டிருந்தால் அவரால் நிச்சயம் பொறுமையாக இருந்திருக்க முடியாது.
இந்த நேர்காணலுக்கு எதிராகவும் சன்னி லியோனுக்கு ஆதரவாகவும் பல ஹிந்தி திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025