George / 2016 மார்ச் 17 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் திரையுலகத்தில் இன்னும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் வரவில்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.
தெறி திரைப்படமும், 24 திரைப்படமும் அடுத்தடுத்து வந்த பிறகுதான் சமந்தாவின் தமிழ் மார்க்கெட் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். அவரது நடிப்பில் இதற்கு முன் தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களான அஞ்சான், 10 எண்றதுக்குள்ள ஆகிய இரண்டும் கொடுத்த தோல்வி சமந்தாவை நிறையவே யோசிக்க வைத்துவிட்டதாம்.
தமிழில் தனக்கு ராசி வொர்க் அவுட் ஆகுமோ ஆகாதோ என்ற எண்ணத்தில் தெலுங்கில் பல புதியத் திரைபடங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம்.
அதோடு, ராகுல் ப்ரீத்தி சிங்கால் ஏற்படும் போட்டியைச் சமாளிக்க தனது சம்பளத்தையும் அதிரடியாகக் குறைத்துவிட்டாராம்.
தெலுங்கிலும் பிரம்மோற்சவம், அ ஆ ஆகியத் திரைப்படங்கள் அடுத்தடுத்து வர உள்ளதாம். மேலும் சில புதியத் திரைப்படங்களுக்கான பேச்சு வார்த்தைகளையும் ஆரம்பித்துவிட்டாராம்.
அதிரடியாக சம்பளத்தையும் குறைக்க சம்மதித்துவிட்டதால், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சமந்தாவையே தங்களது திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யவும் முன்வந்துள்ளார்களாம்.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago