S.Renuka / 2026 ஜனவரி 01 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}


தானா சேர்ந்த கூட்டம் படம் மூலம் தன் 20 வருட ஆசை நிறைவேற்றிவிட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்தது பற்றி பேசப்படுகிறது. சிறுமியாக இருக்கும் போது அவருக்கு அந்த ஆசை ஏற்பட்டிருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸான பிறகே விக்கியை அன்பான இயக்குநர் என்று ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். அந்த அன்பான இயக்குநரின் படத்தின் மூலம் தான் கீர்த்தி சுரேஷின் ஆசை, சவால் என்றும் கூட சொல்லலாம், நிறைவேறியிருக்கிறது.
2025ஆம் ஆண்டு இன்னும் சில மணிநேரத்தில் முடிந்து 2026ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு எப்படி இருந்தது என்று பலரும் பழைய நினைவுகளை அசைபோடுகிறார்கள்.
இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷ் சொன்னது மாதிரியே நடந்தது பற்றி பேசப்படுகிறது. தானா சேர்ந்த கூட்டம் படத்தை விளம்பரம் செய்ய அளித்த பேட்டியில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தது பற்றி கீர்த்தி சுரேஷ் பேசியிருந்தார்.
அவர் கூறியதாவது, நடிச்சு காட்டுறேன்: சூர்யா சாருடன் சேர்ந்து நடித்ததில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிவகுமார் சாருடன் சேர்ந்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார் என் அம்மா மேனகா. அவங்க படம் பார்க்கும்போது, இவர் பையன் கூட நான் நடிச்சுக் காட்டுகிறேன் பாரும்மானு நான் சொல்லியிருக்கிறேன். ஒரு வீம்புக்கு அப்பொழுது சொன்னேன். அது இப்போ நிஜமாகவே நடந்து விட்டது என்றார்.
அதை கேட்ட சூர்யா சும்மா இல்லாமல், அது எந்த வயசுல சொன்னீங்க என்று கேட்டார். அப்போ நான் 5ஆம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன் சார்னு சிரிக்க, அப்போவே நான் நடிக்க வந்து விட்டேனானு கேட்டார் சூர்யா. ஆமாம் சார், நீங்க அப்பவே நடிக்க வந்துவிட்டீங்க என்று வெட்கப்பட்டு சிரித்தார் கீர்த்தி சுரேஷ். அதை கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளினியோ, சார் 20 வருஷம் சார்னு சொல்ல, நானா கேட்டு மாட்டிக்கிட்டேனா என்று சிரித்தார் சூர்யா. 5ஆம் வகுப்புல விட்ட சவால் நிறைவேற 20 ஆண்டுகளாக காத்திருந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வாவ் என்கிறார்கள் ரசிகர்கள்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago