2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் ’ரவுடி பேபி’

S. Shivany   / 2020 நவம்பர் 17 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'மாரி 2'. படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
 
குறிப்பாக ரவுடி பேபி பாடல் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். 
இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
 
இதற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்திருந்தார்.
 
இந்த பாடல் தற்போது யூடியூபில் 1 பில்லியன்இ அதாவது 100 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதால் சாதனையைப் படைத்துள்ளது.
 
 தென்னிந்தியத் திரையுலகில் ஒரு சினிமா பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதன் முறை. இதற்கு முன்பு ஓரிரு இந்திப் பாடல்கள் மட்டுமே 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளன.
 
இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல் என்ற வரிசையில் 'ரவுடி பேபி' 5-வது இடத்தில் உள்ளது. 
 
 
 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X